இளம்பெண் மாயம்!!

 


மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை என மன்னார் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த, அ.கான்சியூஸ் சகாய கீர்த்தனா என்ற 21 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

, காணாமல் போனதாக கூறப்படும் அப்பெண், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து முச்சக்கர வண்டி ஊடாக மன்னார் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வவனியா பேருந்தில் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.