வெளிநாட்டில் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்!!
அவுஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட மூவர் 2.8 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
45 வயதான இலங்கை மருத்துவர் திஹான் தரங்கா மற்றும் 53 வயதான ரிச்சர்ட் வில்லியம் லாஹெர்டி ஆகிய இருவருமே இந்த ஊழல் மோசடியில் சிக்கியுள்ளனர்.
குறித்த இருவரும் அவுஸ்திரேலியாவின் பிரபல மருத்துவமனைகளான இளவரசி அலெக்ஸாண்ட்ரா மற்றும் ரோயல் பிரிஸ்பேன் மகளிர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர்களாகும்.
Medivance எனும் மருத்துவ உபகரண விநியோக நிறுவனத்திடமிருந்து மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த இருவரும் இரகசியமாக பணம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் ரிச்சர்ட் லாஹெர்டி என்பவர், உபகரணங்களைப் பயன்படுத்தியதற்காக 20 சதவீத இலாபத்தைப் பெற்றதோடு, தனது சத்திர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் கமரா உபகரணங்களை வாடகைக்கு எடுத்ததாகக் கூறி முறைகேடாகப் பணம் பெற்றுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை