மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பொலிசார்!!

 


குற்றச் செயல்களை தடுக்க பொலிஸாருடன் அனைவரும் இணைய வேண்டும் என நுவரெலியா மாவட்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி அழைப்பு விடுத்துள்ளார்.

பொது மக்கள் பொலிஸ் பாதுகாப்பு குழுவுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஒன்று இன்று (03.01.2026) கொட்டகலை பகுதியில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நாளாந்தம் இடம் பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. 

இதனை பொலிஸாரினால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது.அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.இன்று இதனை பெற்றுக்கொள்வதற்காகவே பொது மக்கள் பொலிஸ் பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கும் பொது மக்களுக்கும் குற்றச்செயல்களை தடுக்க பாரிய பொறுப்பு உள்ளது. எனவே குற்றச் செயல்களை தடுக்க பொலிஸாருடன் அனைவரும் இணைய வேண்டும்.

இன்று கொள்ளைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலான கொள்ளைச் சம்பவங்கள் தமது அறியாமை மற்றும் கவனயீனம் காரணமாகவே நடைபெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.