சிறைக்குச் சென்று டக்ளசை சந்தித்த நாமல்!!


 ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று சந்தித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி காணாமல் போன வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், நாமல் ராஜபக்ச, மஹர சிறைச்சாலைக்குச் சென்றே டக்ளஸைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் எம்.பி., புலி டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.