டூம்ஸ்டே விமானம்' (Doomsday Plane) திடீரென வெளியே தோன்றியது !
ஆகாயத்தில் இருந்தபடியே.. அணு அட்டாக் செய்யலாம்! வெளியே வந்தது டூம்ஸ்டே விமானம். ரம்ப் ஷாக் முடிவு.
அமெரிக்க அதிபருக்கான 'டூம்ஸ்டே விமானம்' (Doomsday Plane) திடீரென வெளியே தோன்றியது மக்களிடையே கேள்விகளை எழுப்பி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஆபத்து காலங்களில் பாதுகாப்பாக செல்ல பயன்படுத்தும் இந்த விமானம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களைக் கேள்விகள் கேட்கத் தூண்டி, ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணப்படங்கள் அல்லது பேரழிவுத் திரைப்படங்களில் மட்டுமே காணக்கூடிய இந்த விமானம், சாதாரணமாக வானில் பறப்பதைக் காண்பது பெரும்பாலானோருக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
என்ன விமானம் இது?
இது ஒரு சாதாரண விமானம் அல்ல. அமெரிக்க அரசாங்கம் மிக மோசமான சூழ்நிலைகளிலும் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பறக்கும் கண்ட்ரோல் ரூம் மையமாகும்.
இதன் உள்ளே பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகள், பாதுகாப்புடன் கூடிய அறைகள் பகுதிகள், மற்றும் வானிலிருந்தே இராணுவத்திற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் திறன்கள் உள்ளன.
வானத்தில் இருந்தே அணு ஆயுத அட்டாக் நடத்தவும் இதன் மூலம் உத்தரவிட முடியும். போர் சமயங்களில் அதிபரின் உயிரை காக்கவும்.. அதே நேரம் எதிரி நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக இந்த விமானம் பயன்படுத்தப்படும் .
திகிலூட்டும் அம்சம்
இது நீண்ட நேரம் வானில் பறக்கக்கூடியதுடன், நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியையும் கொண்டது. அணு குண்டு வெடிப்புகளால் ஏற்படும் மின்காந்தத் துடிப்புகளிலிருந்து (electromagnetic pulses) அதன் அமைப்புகளைப் பாதுகாக்க வல்லது. சுருக்கமாகச் சொன்னால், தரைப்பகுதி இனி பாதுகாப்பாக இருக்காது என்ற அவசர கால சூழ்நிலைகளுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பதட்டங்கள் அதிகரிக்கும்போது இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பறக்கவிடப்படுகிறது. டூம்ஸ்டே விமானம் வானில் பறக்கும் ஒவ்வொரு முறையும், உலக நாடுகள் அமைதி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
போர் மூள்கிறதா?
ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் அரசியல் பேச்சு என புறக்கணிக்கப்பட்ட இது, தற்போது ஐரோப்பியத் தலைவர்களால் தீவிரமான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா - அமெரிக்கா இடையிலான உறவுகளில் பெரும் நெருக்கடியை இது ஏற்படுத்தலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை