"வாகனத்தை பொக்ஸ் அடிச்சு தான் வெடி வைச்சு இருக்கிறாங்க ?"
தீவகத்தில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த வாகனத்தை அல்லைப்பிட்டி பகுதியில் நின்ற பொலிஸார் மறிச்சு இருக்கிறாங்க. வாகனம் நிற்காது தொடர்ந்து பயணித்துள்ளது.
அது தொடர்பில் மண்டைதீவு பொலிஸ் காவலரனுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உஷார் நிலையில் இருந்ததும். வந்த வாகனம் மண்டைதீவில் பொலிஸார் உசார் என்றதும் , மீண்டும் அல்லைப்பிட்டி பக்கம் வாகனத்தை திருப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.
அந்த நேரம் அல்லைப்பிட்டியில் இருந்து வாகனத்தை துரத்தி வந்த பொலிஸ் குழு வாகனத்தை நோக்கி சூட்டுள்ளனர். அதோடு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. (சம்பவம் நடந்தது யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில்)
வாகனத்தினுள் உள்ளவர்கள் தமக்கு ஒரு துப்பாக்கி சூட்டு சத்தமே கேட்டதாகவும். அதோடு வாகனத்தை வீதியோரமாக நிறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் பொலிஸ் தரப்பு தகவலின் அடிப்படையில் ஒரு கைத்துப்பாக்கி சூடும் , ஏகே துப்பாக்கி சூடு 08ம் நடத்தப்பட்டதாக
படம் 1 :- வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில் உள்ள காயம். அது முன் பக்கத்தால் ஏதோ ஒரு பொருள் தாக்கியுள்ளது (?) உள்பக்கத்தால் வந்த சன்னம் ஏதேனும் தாக்கி இருந்தால் கண்ணாடியில் உள்ள ஓட்டை வெளிப்பக்கம் தள்ளி இருக்கும். முன் பக்கத்தால் ஏதோ ஒரு பொருள் தாக்கி இருக்கலாம்
படம் 2 :- நின்ற வாகனத்தின் பின் பக்க கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டு இருக்கலாம். ஏனெனில் கண்ணாடி சிதறல்கள் அவ்விடத்தில் காணப்படுகிறது.
படம் 3 :- துருப்பிடித்த வாள்
படம் 4 :- வீதியில் படிந்துள்ள இரத்த கறை வாகனம் இரத்த வடிய வடிய சில தூரம் பயணித்து இருக்கலாம்..
படம் 5 ;- வாகனத்தின் பின் பக்க கண்ணாடி உடைவு.
இது துப்பாக்கி சூட்டால் ஏற்பட்ட உடைவு போன்று இல்லை. இந்த கண்ணாடி உடைவு துண்டுகள் தான் படம் 2 இல் வீதியில் சிதறி இருக்கும் கண்ணாடி துண்டுகள், நின்ற வாகனத்தின் கண்ணாடி அடித்து உடைத்து இருந்தாலே , அவ்வாறு காணப்படும்.
படம் 6 :- துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான வாகனம் நின்ற இடம். அதில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் , பொலித்தீன் பையில் சாணகம் காணப்பட்டுள்ளது.
படம் 7 ;- பொலித்தீன் பையில் காணப்படும் சாணகம்
படம் 8 :- சம்பவம் இடம்பெற்ற பகுதி. சிவத்த வட்டத்திற்குள் இருப்பது தான் பேருந்து நிலையம். அதற்கு அருகில் தான் பொலித்தீன் பைக்குள் சாணகம் இருந்தது.
படம் 09 :- மண்டைதீவு பொலிஸ் காவலரண். அங்கு வீதி தடைகள் தயார் நிலையில், மண்டைதீவு பொலிஸ் காவலரணில் 24 மணி நேரமும் பொலிஸார் கடமையில் இருப்பார்கள் ஏதேனும் சம்பவம் என்றால் வீதி தடைகளை வீதிக்கு உடனே இழுத்து விடுவார்கள். அதற்கு ஏதுவாக சில்லுகள் எல்லாம் பூட்டப்பட்டுள்ளன.
இப்படி நிறைய விடயங்கள் இருக்கு. இருக்கட்டும்.
கைதானவர்கள் தொடர்பில் பலரும் முன் வைக்கும் குற்றச்சாட்டு " மாட்டு கள்ளர்" பொலிஸார் நேற்றைய தினம் நீதிமன்றில் கைதான இருவரையும் முற்படுத்திய வேளை அவர்களுக்கு முற்குற்றம் உள்ளதாக தெரிவிக்கவில்லை. உயிரிழந்த சிறுவனுக்கும் இருந்ததாக தெரிவிக்கவில்லை
விளக்கமறியலில் வைக்கப்பட்ட இருவருக்கும் பிணை கோரி இன்றைய தினம் புதன்கிழமை சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்த போதிலும் , பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸார் உயிரிழந்த மற்றும் விளக்கமறியலில் இருந்த இருவருக்கும் எதிராக எந்தவொரு முற்குற்றங்கள் இருந்ததாகவும் மன்றில் தெரிவிக்கவில்லை.
அத்தோடு , பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு முற்குற்றம் இருப்பது தொடர்பில் எந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை.
அதை விட சம்பவம் இடம்பெற்ற வேளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்தில் சம்பவத்துடன் தொடர்பு பட்ட பொலிஸ் குழுவில் ஒருவராக இருந்துள்ளார். அவரது உத்தரவிலையே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.
சம்பவம் தொடர்பில் முதல் கட்டமாக குறைந்த பட்சம், பொலிஸ் விசேட விசாரணை குழு ஒன்று அமைத்து , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து இருக்க வேண்டும்.
விசாரணைங்களில் தலையீடு இருக்க கூடாது என்பதற்காக சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவை இடை நிறுத்தியோ , வேறு பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்தோ விசாரணைகளை முன்னெடுத்து இருக்க வேண்டும்.
ஊர்காவற்துறை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி இருக்க முடியாது. பிறிதொரு விசேட பொலிஸ் குழுவே விசாரணைகளை முன்னெடுத்திருக்க வேண்டும்.
ஏனெனில் சம்பவத்துடன் தொடர்பு பட்ட பொலிஸ் குழுவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் காணப்படுவதனால் , அந்த பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகள் எவ்வளவு தூரம் நியாயமாக இருக்க முடியும் ??
ஆ.. அப்புறம் வாகனத்தின் பின் சீட் எங்கே என கேட்டதற்கு , உமையாள்புரத்தில் வயல் உள்ளதாம், அங்கிருந்து நெல் மூட்டை ஏற்றி வர ஏதுவாக கழட்டி வைச்சது என வாகனத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனம் கூட ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை