தெஹ்ரான் மீது குண்டுவீசினால் 'ஆபிரகாம் லிங்கன்' கப்பல் சிதறும், ரஷ்ய ஆயுதங்களை நம்பி ஹூதிகள் மிரட்டல்."


அமெரிக்கா ஒருவேளை ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது குண்டுவீசினால், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கனை (USS Abraham Lincoln) அழித்துவிடுவோம் என்று யேமனின் ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.


​ரஷ்ய தயாரிப்பான  பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை (Ballistic Missiles) பயன்படுத்தி இந்தக் கப்பலைத் தகர்க்கப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் கூட்டாளியான ஹூதிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

தற்போது அரபிக் கடல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் இந்த பிரம்மாண்ட கப்பல், ஹூதிகளின் இலக்காக மாறக்கூடும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.