T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் கிண்ணம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு வருகை!
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையும் இந்தியாவும் இணைந்து நடத்தவுள்ள நிலையில், தொடருக்கான உலகக்கிண்ணம் இன்று (01.02.2026) பிற்பகல் 03.15 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு எடுத்துவரப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்றலில் நடைபெற்ற நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர சபை முதல்வர் கௌரவ மதிவதனி விவேகானந்தராஜா, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அழைப்பிதழ் பெற்ற முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, உலகக்கிண்ணத்தை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் அதிகாரிகள், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு கிண்ணத்தை நேரில் பார்வையிட்டு உற்சாகம் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பாக கலாசார நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
உலகக்கிண்ணத் தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் இக்கிண்ணம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டின் பல முக்கிய நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, இன்று யாழ்ப்பாணத்திற்கும் இந்த கிண்ணம் எடுத்துவரப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களிடையே விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலும், உலகக்கிண்ணத்தை நேரில் காணும் அரிய வாய்ப்பை வழங்கும் வகையிலும், இந்தக் கிண்ணம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காட்சிப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.




















.jpeg
)





கருத்துகள் இல்லை