கச்சதீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி.!


கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.


வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று [24] மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  


வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 


இந்த திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கமைய அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதன்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் விரிவாக ஆராயப்பட்டிருந்து.


இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர், வடமாகாண கடற்படைத் தளபதி, இந்திய துணைத் தூதரக அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#செய்திகள்  #யாழ்ப்பாணம் #கச்சத்தீவு #இந்தியா #அந்தோனியார்கோயில் #கடற்படை #இலங்கை #antmedia #SriLanka #LocalNews #kachchadevu #India

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.