81 வயதில் O/L பரீட்சைக்குத் தோற்றிய முதியவர்.!
கிரிபெரிய பகுதியைச்சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா என்ற முதியவர் இம்முறை இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தர (சா/த) பரீட்சையில் கணித பாடத்தில் தோற்றியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், தேசிய கல்வி முறையின் நிலை குறித்து அரசாங்கத்திற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பும் நோக்கல் இவர் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
நடைமுறை வாழ்க்கைக்கு அவசியமானது என நம்பப்படும் அடிப்படை எண்கணித முறைகள் புதிய சீர்திருத்தத்தில் இடம்பெறவில்லை. இது மாணவர்களின் முக்கிய திறன்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளதாக பரீட்சைக்கு தோற்றிய நிமல் சில்வா என்ற முதியவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை இன்றைய தேர்வுகள் பல தேர்வு கேள்விகள் மற்றும் சிக்கலான வடிவங்களால் ஆதிக்கம் செலுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர் இத்தகைய கல்வித் திருத்தங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை விட குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அதே வினாத்தாளில் தேர்ச்சி பெற முடியுமா என்ற சவால்மிகுந்த கேள்வியுடன், தமது நிலையினை மதிப்பிட அவர்களையும் பரீட்சையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#கல்வி #சீர்திருத்தம் #பிரதமர் #OlLexam #Oldman #Education #Primeminister #president

.jpeg
)





கருத்துகள் இல்லை