இலங்கையின் சுதந்திரதினம்!
1948 ஆம் ஆண்டு வெள்ளைக்காரர் நாட்டைவிட்டுப் போகும்போது, அனுர போன்ற ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வந்திருந்தால், நாங்களும் இன்று மகிழ்ச்சியோடு சுதந்திரதினம் கொண்டாடி இருந்திருக்கலாம்.
‘இலங்கை சிங்களவர்களுக்கு மட்டும்’ என அன்று கோஷம் போட்டவர்களை அவர் அடக்கியிருப்பார். ‘சிங்களம் மட்டும்’ சட்டம் வந்திருக்காது. கஸப்பதேரரைப் பிடித்து உள்ளே போட்டதுபோல, அன்று பல பிக்குகளைத் தூக்கி உள்ளே போட்டிருப்பார். நிராயுதபாணிகளாக இருந்த நாம் தாக்கப்பட்டிருக்க மாட்டோம். பின்னர் நாம் ஆயுதம் தூக்கவேண்டியும் வந்திருக்காது. இப்படி பல விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் நமக்கு வாய்த்த ஜனாதிபதிகள் எல்லோரும் மகா தற்குறிகள். யாரோ ‘ஜே ஆர் ஜெயவர்த்தன’ எண்டு ஒரு தற்குறியாம். தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொல்லச் சொல்லி, இராணுவத்துக்கு கட்டளை இடுவாராம். சொந்த மக்களுக்கு எதிராக இராணுவத்தை ஏவிவிட்ட ஒரு….!!
அப்படியாக மஹிந்த, ரணில், கோத்தாபய என்று பல தற்குறிகள் வந்து, சின்னஞ்சிறிய இந்த அழகிய நாட்டை நாசமறுத்து, கடைசியில் இப்பதான் ஒரு நல்ல ஜனாதிபதியைக் கண்டிருக்கிறோம். இத்தனை வளங்கள் கொண்ட இந்த அழகிய நாட்டில் இரத்த ஆறு ஓடியிருக்கத்தான் வேண்டுமா?
அவசியமே இல்லை!
கொஞ்ச நஞ்சம் அல்ல - 76 ஆண்டுகளை வீணாக்கியிருக்கிறோம். லட்சம் உயிர்களை இழந்திருக்கிறோம். எல்லாம் ஏன்?
அனுர அப்பவே வந்திருந்தா, ஒரு பிரச்சனையும் வந்திருக்காது. அவர் எல்லோரையும் அரவணைத்துச் சென்றிருப்பார். நாமும் சிங்கப்பூரைத் தாண்டி எங்கோ சென்றிருப்போம்.
எல்லாத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டு ‘வெல்லை சிரகடிக்கும் வென்புராவே’ என்று ரேடியோவுல டெயிலி பாட்டுபோட்ட சமாதானம் வருமா? ( எழுத்துப்பிழை விடவில்லை. அந்தப் பாட்டே அப்படித்தான் )
இன்று ஜனாதிபதி அனுர, புதியபாதையில் எம்மை அழைத்துச் செல்கிறார். ஆனால் போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு என்பதே உண்மை!

.jpeg
)





கருத்துகள் இல்லை