78ஆவது தேசிய சுதந்திர தினம் – சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகத்தில்!
இன்றைய தினம் (04.02.2026) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78ஆவது தேசிய சுதந்திர தினம், யாழ்ப்பாணம் சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகத்தில் மகிழ்ச்சியும் பெருமையும் நிறைந்த சூழலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, வீதியால் பயணித்த தமிழ் மக்கள் எவ்வித கட்டாயமுமின்றி, மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் தேசியக் கொடிகளை பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
இந்தக் காட்சிகள், சுதந்திரம் என்பது யாழ்ப்பாண மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் மறுக்க முடியாத உயரிய பெறுமதி கொண்ட ஒன்றாக இருப்பதை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புகின்றனர்; அதனைப் போற்றி பெருமையுடன் கொண்டாடுகின்றனர் என்பதையும் இது உணர்த்துகிறது.
இந்தச் சிறப்பு நாளை நினைவுகூரும் விதமாக,
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே – அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்த்து சிறந்ததுத் இந்நாடே – இதை வந்தனை கூறி மனதில் இருத்தியென் வாயுற வாழ்த்தேனோ”
எனும் கவிதை வரிகளும்,
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே”
எனும் தேசிய உணர்வை தூண்டும் மேற்கோளும் நினைவுகூரப்பட்டன.
இந்த நிகழ்வு, சுதந்திரத்தின் மதிப்பையும், தேசபக்தி உணர்வையும் மக்கள் மத்தியில் மேலும் உறுதிப்படுத்தும் முக்கியமான தருணமாக அமைந்தது.










.jpeg
)





கருத்துகள் இல்லை