சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு!!


 2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள தனியார் விண்ணப்பத்தாரர்கள், தமது அனுமதி அட்டைகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்வதற்கான கால அவகாசம் குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

தனியார் விண்ணப்பத்தாரர்கள் தமது அனுமதி அட்டைகளில் பெயர், பாடங்கள் அல்லது ஏதேனும் தகவல்களில் பிழைகள் இருப்பின், அவற்றை நேரடியாக இணையதளம் ஊடாகவே திருத்திக்கொள்ள முடியும்.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்துக்கு பிரவேசித்து அங்கு விண்ணப்பத்தாரரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

இந்தத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பெப்ரவரி 10 ஆம் திகதி நள்ளிரவு வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காலக்கெடுவுக்குப் பின்னர், எக்காரணம் கொண்டும் மேலதிக அவகாசம் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, விண்ணப்பத்தாரர்கள் தாமதமின்றித் தமது அனுமதி அட்டைகளைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.