காதலர் தினம்!!
காதலர் தினம்தானா பெப்ரவரி 14 ...?
உண்மையில் இந்நாள் எந்நாள்..?
பொதுவாக உலகளாவிய ரீதியில் இந்நாளை Valentine's day என அழைத்தாலும் நாம் அதற்கு காதலர் தினம் என்றும் அன்பானவர்கள் தினம் என்றும் அர்த்தப்படுத்துகிறோம்.
ஆனால் இந்நாள் உரோமப் பேரரசு காலத்தில்தான் அறிமுகமாகி இருக்கிறது என்றாலும்.. அதற்கு முதலே மக்கள் காதலை நினைத்து கொண்டாடி இருக்கின்றனர்.
உரோமானிய மன்னன் கிளாடிஸ் மிமி இளைஞர்களது திருமணத்திற்கு தடை விதித்தான். காதல் உணர்வால் தனது படைவீரர்கள் சரியாக போரிடமாட்டார்கள் என எண்ணினான்.
அப்போது வெலன்டைன் எனும் பாதிரியார் காதல் வசப்பட்ட சோடிகளை இரகசியமாக சேர்த்து வைத்ததால் அவருக்கு மன்னன் மரண தண்டனை விதித்து சிறையில் அடைத்தான்.
அப்பொழுது சிறை காவல் அதிகாரியாக இருந்தவரது மகளும்.. தனது நெடு நாள் அன்பானவளுமாகிய அஸ்டோரியஸ் என்பவளுக்கு முதன்முதலாக கடிதம் எழுதினார் வெலன்டைன்.
அதில் "உன் வெலன்டைன்ஸிடமிருந்து.." என குறிப்பிடப்பட்டுள்ளதாம். இது உண்மை எனில் இதுவே முதல் காதல் கடிதமுமாகும்.
பின்னர் வெலன்டைனுக்கு 270 பெப் 14 கல்லால் அடித்து சித்திரவதையின் பின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும்.. அதுவே இந்நாள் வெலன்டைன் டே எனப்படுவதாகவும் கதை இருக்கிறது.
பின்னர்.. 200 வருடங்கள் கடந்து.. ஜெலாசியஸ் மி எனும் போப்பாண்டவரால் வெலன்டைனுக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால்.. இதற்கு முதலே மத்திய இங்கிலாந்தின் பழமைவாதிகள்.. இந்த பெப் 14 ல் பறவைகள் மூலம் தமக்கேற்ற சோடிகளை தெரிவு செய்துமிருக்கிறார்கள்.
பிற்காலத்தில் 1400 களில் சட்ட மொழியை பயன்படுத்தி பாரிசில்.. நேர்த்தியான காதல் சம்பிரதாயத்துக்காக.. காதல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இங்கு காதல் ஒப்பந்தம் மற்றும் துரோகங்கள் கவனிக்கப்பட்டன.
1797 களில் காதல் கவிதைகள் கொண்ட வெலன்டைன் அட்டைகளும்.. 1800 களில் காகித வடிவ வாழ்த்து அட்டைகளும் உருவாக்கப்பட்டன.
புனிதத்திற்கு அப்பால்.. இந்நாள் வியாபார நோக்கமுடையது எனும் கருத்துமுண்டு.
பரிசில்கள் மற்றும் வாழ்த்தட்டைகளை விற்க மேற்குலகம் தெரிவு செய்த நாளென்பர் ஒரு சிலர்.
உண்மை தான்.. கிருஸ்மஸுக்கு அடுத்தபடியாக அதிக அட்டைகள் விற்கப்படும் நாளும் இதுவாகும்.
ஆக..
இப்பேற்பட்ட இவ் வெலன்டைன் நினைவு நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்..?
முல்லைத்தீபன்.
வே

.jpeg
)





கருத்துகள் இல்லை