காதலியை கொன்று ஆவியை அழைத்த இளைஞர்!!


 இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்பிஏ மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான பியூஷ் தமோதியா அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 10 அன்று, மாணவியை அறைக்கு அழைத்து சென்ற பியூஷ், அவரை வற்புறுத்தி உறவுக்கு அழைத்த போது மாணவி மறுத்ததால், அவரது கை கால்களை கட்டி, வாயில் துணியைத் திணித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தின் அருகிலேயே அமர்ந்து பியூஷ் மது அருந்தியுள்ளார். மாணவியின் மொபைலில் இருந்த ஆபாச வீடியோக்களை கல்லூரி வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துவிட்டு மும்பைக்கு தப்பியோடினார்.

மும்பை பன்வெல் பகுதியில் பதுங்கியிருந்தபோது, தான் கொன்ற பெண்ணின் ஆவியுடன் பேச யூடியூப் வீடியோக்களை பார்த்து பில்லி சூனியம் மற்றும் மாந்திரீக சடங்குகளைச் செய்துள்ளார்.

காதலி வேறு ஒருவருடன் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இதை செய்ததாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ள அவரிடம், தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.