பதவியை இராஜிநாமா செய்த அதிகாரி!!

 


லங்கா சீனி கம்பனியின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை அவர் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறிப்பிட்ட சில மாகாண அரசியல்வாதிகளுடனான முரண்பாடுகள் அதிகரித்தமையே தனது பதவி விலகலுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனம் இயங்கும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை வரம்புகளைத் தெளிவுபடுத்திய போதிலும், சட்டம், விதிமுறைகள் மற்றும் அரச சுற்றறிக்கைகளுக்கு முரணாகச் செயல்படுமாறு உள்ளூர் அரசியல்வாதிகளிடமிருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள் வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனமான லங்கா சீனி நிறுவனம், கடுமையான நிதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும், சுற்றறிக்கைகள் மற்றும் சட்ட நடைமுறைகளை மீறும் வகையிலான கோரிக்கைகளுக்குத் தானும் பணிப்பாளர் சபையும் இணங்க மறுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

நல்லாட்சி மற்றும் நிறுவனத்தின் நலனைக் கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.