இலங்கை தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!




அரசாங்க வைத்தியசாலைகளில் 20,000 தாதியர்கள் பற்றாக்குறை உள்ளதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரியா தெரிவித்துள்ளார்.

தாதியர் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க கலந்துரையாடல் நடத்தாத சுகாதார அமைச்சர் உட்பட தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் பாரிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆட்சியில் இந்த நாட்டில் டொலர்களை சம்பாதிக்க தாதியர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு தற்போதைய ஆட்சியால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தாதியர்கள் தற்போது அரசாங்க தாதிய சேவையை கைவிட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் சுமார் 150 தாதியர் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், நாடு முழுவதும் அமைந்துள்ள 18 தாதியர் பயிற்சிப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.