(ASP) ரோஹன் ஒலுகல திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்!
உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹன் ஒலுகல திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி இரவு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக முதலில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் விசேட வைத்தியக் குழுவினரின் பரிசோதனைகளைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை தேறி வருவதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை