தொழில்நுட்பப் போர் (Tech War)

 


உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பப் போர் (Tech War) ஒன்று நேற்று அரங்கேறியுள்ளது. 


உலகின் வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் Stealth (ரேடாரில் சிக்காத) தொழில்நுட்பத்தை, ஈரான் ஒரு நொடியில் முறியடித்து, அந்த ராட்சத ட்ரோனை பத்திரமாகத் தரையிறக்கியுள்ளது. 


இது வெறும் விமானம் காணாமல் போன சம்பவம் அல்ல, இது மூன்றாம் உலகப்போரின் தொடக்கம். 


அமெரிக்கக் கடற்படையின் மிக அதிநவீன மற்றும் சுமார் $130 மில்லியன் மதிப்புள்ள MQ-4C Triton என்ற உளவு பார்க்கும் ஆளில்லா விமானம், பாரசீக வளைகுடா பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. 


கடந்த பிப்ரவரி 22, 2026 அன்று, அபுதாபியில் இருந்து புறப்பட்ட இந்த ஆளில்லா விமானம், ஈரானுக்கு தெற்கே சுமார் 32,900 அடி உயரத்தில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென விமானத்திலிருந்து '7700' (அவசரகால சிக்னல்) அனுப்பப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், ரேடார் திரைகளில் இருந்து அந்த விமானம் முற்றிலுமாக மறைந்து போனது. 


அமெரிக்காவின் MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் ஏன் இவ்வளவு விலை உயர்ந்தவை? ஏனெனில் இவை எதிரி நாட்டு ரேடார்களில் ஒரு 'சிறிய பறவை' போலக்கூடத் தெரியாது. 


ஆனால், ஈரான் இந்தத் தடையை இரண்டு முக்கிய தொழில்நுட்பங்கள் மூலம் உடைத்துள்ளது:


சீனாவிடமிருந்து ஈரானுக்குக் கிடைத்ததாகக் கருதப்படும் Quantum Radar Technology. இந்த ரேடார் தொழில்நுட்பம், ரேடியோ அலைகளுக்குப் பதிலாக Photonsகளை பயன்படுத்துகிறது. இது எவ்வளவு நுணுக்கமான Stealth விமானத்தையும் துல்லியமாகக் காட்டிவிடும்.


GPS Spoofing தொழில்நுட்பம், ஈரானின் மாஸ்டர் பிளான்! ட்ரோனைச் சுட்டு வீழ்த்தினால் அதன் பாகங்கள் சிதறிவிடும். அதற்குப் பதிலாக, அந்த விமானத்திற்குச் செல்லும் செயற்கைக்கோள் சிக்னல்களைத் துண்டித்துவிட்டு, "நீ இப்போது உன் சொந்தத் தளத்தில் இருக்கிறாய்" என்ற தவறான சிக்னலை (False Coordinates) ஈரானிய ஹேக்கர்கள் அனுப்பினர். இதனால் அந்த ட்ரோன் தானாகவே ஈரானிய நிலப்பரப்பில் தரையிறங்கியுள்ளது.


இந்தச் சம்பவத்தில் ரஷ்யாவின் Avtobaza-M போன்ற ELINT (Electronic Intelligence) அமைப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இவை அமெரிக்க ட்ரோனின் தகவல் பரிமாற்றக் குறியீடுகளை (Encryption) நொடிகளில் உடைக்கும் வல்லமை கொண்டவை.


இப்பொழுது சிக்கல் என்னவென்றால் அமெரிக்காவின் ரகசியக் குறியீடுகள் இப்போது ஈரான் மற்றும் ரஷ்யாவின் கைகளில் சிக்கியுள்ளன.


இதுவரை அமெரிக்காவை எவராலும் நெருங்க முடியாது என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்கா தனது அதிநவீன ஆயுதத்தைப் பறிகொடுத்திருப்பது, அதன் நட்பு நாடுகளிடையே (NATO) கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


"நாங்கள் எதையும் சுடவில்லை; அவர்களின் மூளையை (தொழில்நுட்பத்தை) முடக்கினோம்" என்பதே ஈரானின் மறைமுகச் செய்தியாக இருக்கிறது.


அமெரிக்கா தனது ரகசியத் தரவுகள் கசிவதைத் தடுக்க அந்தத் தளம் மீது வான்வழித் தாக்குதல் நடத்துமா? அல்லது இந்தப் பின்னடைவை மறைக்க அமைதி காக்குமா? என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.