யாழ் பல்கலை துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பதவி பொறுப்பேற்றார்!📸


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்காலிகமாக உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியாகவும், கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றி வந்த தி. வேல்நம்பி அவர்கள் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக தனது பதவியைப் பொறுப்பேற்றார்.


பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்ட பின்னர், முற்பகல் 9.30 மணியளவில் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இவ்வமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு புதிய துணைவேந்தருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர் என பதிவாளர் வி. காண்டீபன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.