கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகளை சாட்சியாக மாற்றி தப்ப வைக்க முயன்ற சுமந்திரன்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரான திலீபன் தயாளினியின் கொலை சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயமாக பார்க்கப்படுகிறது. குறித்த விரிவுரையாளரை அவரது மகளின் கணவன் கொலை செய்வதற்கு விரிவுரையாளரின் மகளும் உடந்தையாக இருந்த விடயம் பொலிஸ் விசாரணைகளில் அம்பலமானது.
யாழ்ப்பாண பொருளாதாரம்
இந்நிலையில் கொலை சந்தேகநபரான விரிவுரையாளரின் மகளை அரச தரப்பு சாட்சியாக மாற்றி, கொலைக்கும் அவருக்குமிடையே சம்பந்தம் இல்லை அல்லது அச்சுறுத்தலின் பேரில் கொலையாளியுடன் சேர்ந்து சொன்றதாக காண்பித்து அவரை கொலை குற்றச்சாட்டில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கு சுமந்திரன் தயாரான இரகசியம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விரிவுரையாளரின் மகனின் கோரிக்கைக்கு அமைவாகவே சுமந்திரன் இவ்வாறு தயாரானதாக உள்ளார்ந்த தகவல்கள் மூலம் தெரியவருகிறது. இருப்பினும் ஊடகவியலாளர் கஜி முகநூலில் வெளியிட்ட பதிவால் எழுந்த சுமந்திரனுக்கு எதிரான கடுமையான எதிர்ப்புகளால் சுமந்திரன் தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்ற அளவுக்கு உத்தமன்போல் கருத்து பகிர்ந்து காய்வெட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மயானத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட முயன்றபோது சுமந்திரன் அவர்களை அச்சுறுத்தும் வகையில், ஒளிப்படங்கள், காணொளிகள் பகிர்ந்தால் கைது செய்யப்போவதாக அச்சுறுத்தினார். பொலிஸாரே பேசாமல் நிற்கும்போது நீதிமன்ற கட்டளை எதுவுமின்றி சுமந்திரன் தன்னிச்சையாக ஊடகங்களை அடக்கிய விடயம் தற்போது பல்வேறு கேள்விகளையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறித்த பெண்ணை காப்பாற்றுவதற்கு சுமந்திரன், பொலிஸ் உயர்மட்டங்களுடனும் பேசியதாக இரகசிய தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
அரச இயந்திரங்கள் ஊடகவியலாளர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துகின்றன என்பது ஒருபுறமிருக்க ஒரு தமிழ் சட்டத்தரணியே எந்தவிதமான அதிகாரமும் இல்லாமல் இவ்வாறு செய்தது சுமந்திரன் மீது மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணுக்காக சுமந்திரன் ஆஜராவதாக வெளியிட்ட ஒரு பதிவையே பொறுத்துக்கொள்ள முடியாத சுமந்திரன், அதே பெண்ணை காப்பாற்ற பலதரப்பட்ட முயற்சி எடுத்ததும், அவருக்காக ஆஜராக ஆரம்பத்தில் சம்மதித்ததும் அவருக்கு தவறாக தெரியவில்லையா?
குறித்த பெண்ணை நீதிமன்றத்தின் அனுமதி பெற்றா அல்லது சுமந்திரன் தனது உயர்மட்ட செல்வாக்கின் அடிப்படையிலா மயானத்துக்கு அழைத்து சென்றார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த கேள்வி எழுவதற்கு சுமந்திரனின் செயற்பாடுகளே காரணம். தனது குட்டுகள் வெளிப்பட்டவுடன் அரசியல் இருப்புக்கு ஆபத்து என்பதால் நழுவி செல்வது தெளிவாக தெரிகிறது.
சுமந்திரன் எந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் ஊடகவியலாளர் என்ன செய்தியை வெளியிடவேண்டும் என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டாம். ஆனால் சுத்துமாத்து சுமந்திரன் ஊடகவியலாளர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்து தனது காவாலி தனத்தை காட்டியுள்ளார்.
சந்தேகநபரான பெண்ணை விரிவுரையாளரின் வீட்டில் நடைபெற்ற இறுதிச் சடங்குக்கோ அல்லது அல்லது பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இறுதி அஞ்சலிக்கோ அழைத்து சென்றால் அங்கு பிரச்சினை ஏற்படும், அதனால் தனக்கும் பிரச்சினை என உணர்ந்தால் சுத்துமாத்து சுமந்திரன் சுடலைக்கு அழைத்து சென்றமை தெரியவருகிறது.
தனக்கு எதிராக கருத்து பதிவிட்ட ஊடகவியலாளர் கஜிக்கு எதிராக கருத்துக்களை பகிருமாறு சுமந்திரனின் ஆதரவாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டது என்ற விடயமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சந்தேகநபரான பெண்ணின் வழக்கிற்கு ஆதரவாக சுமந்திரன் ஆஜராகவில்லை என்றும் துளசி என்ற பெண் சட்டத்தரணியே ஆஜராகியதாகவும் சுமந்திரனின் செம்புகள் கூறுகின்றன. துளசி என்ற பெண் சட்டத்தரணி சுமந்திரனுக்கு கீழே வேலை செய்பவர் என்ற விடயமும் தெளிவாகியுள்ளது. சுமந்திரன், சிறிய வழக்குகள் அல்லது தனக்கு பாதகமான வழக்குகளை தனக்கு கீழுள்ள அல்லது தனக்கு சார்பான சட்டத்தரணிகளுக்கு வழங்கிவிட்டு முக்கிய சந்தர்ப்பங்களில் தான் ஆஜராகின்ற திருவிளையாடல் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. வழக்கு வேறொரு சட்டத்தரணியின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் தனது பெயர் வெளிவராத என்ற சுத்துமாத்து எண்ணமே இதற்கு காரணம்.
மிகவும் பாரதூரமான குற்ற சம்பவங்கள் இடம்பெறும்போது அதில் தனக்கு வேண்டப்பட்டவர்கள் சிக்கினால் உடனடியாக தனது செல்வாக்கை பயன்படுத்தி வெளியே எடுக்கின்ற அல்லது அந்த வழக்கில் இருந்து விடுவிக்கின்ற அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
வலி வடக்கு தவிசாளரான சுகிர்தனின் வீட்டில் வேலை செய்த பெண்ணொருவர் தீயில் எரிந்து பலியான சம்பவத்திலும் சுமந்திரனே தலையிட்டு அது ஒரு தற்கொலை என காண்பித்து சுகிர்தனை காப்பாற்றிய கொடூரமும் இடம்பெற்றது.
விரிவுரையாளரின் மகளை காப்பாற்ற துடிக்கும் சுமந்திரனின் உள்நோக்கம் என்ன? இந்த வழக்கில் ஆர்வம் காட்டும் சுமந்திரன், புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கு, காட்டுப்புலம் ரெஜீனா கொலை வழக்கு என கொடூரமான கொலை வழக்குகளில் முதன்மை சட்டத்தரணியாக ஆஜராகாதது ஏன்? காசு கிடைக்காது என்பதாலா?
சுத்துமாத்து சுமந்திரன் அடங்க வேண்டும் இல்லாவிட்டால் சுத்துமாத்து சுமந்திரன் இதுவரை ஆஜராகி குற்றவாளிகளை காப்பாற்றி விட்ட அனைத்து வழக்குகளும் தூசு தட்டப்பட்டு மக்களின் பார்வைக்கு வெளியிடப்படும்.
ஒன்று பேசிவிட்டு பின்னர் அதனை தான் அவ்வாறு பேசவில்லை என்று சுத்துமாத்து செய்வது சுமந்திரனின் வளமையான பாணி. இவ்வாறான பின்னணியில் முதலமைச்சர் ஆகும் ஆசை சுத்துமாத்து சுமந்திரனுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில், தனக்கு எதிரானவர்களுக்கு ஆசனம் ஒதுக்காமல் காய்வெட்டுவதற்காக ஒரு சுத்துமாத்து கதையை சுமந்திரன் அவிழ்த்து விட்டார். அதாவது ஏற்கனவே தேர்தல் கேட்டு தோற்றவர்களுக்கு தேர்தலுக்கான ஆசனங்கள் வழங்கப்படாது என்று. கடந்த பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் மண் கவ்வினார். அப்படி சொன்ன அதே சுமந்திரன் தற்போது தான் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் என கூறுகின்றார்.
#news #fllowers #BreakingNews #தமிழ்செய்திகள் #Breaking_News #Jaffna #jaffnanews

.jpeg
)





கருத்துகள் இல்லை