யாழ்ப்பாணம் பண்ணையில் பயங்கரம்: இளைஞன் மீது வாள்வெட்டு!📸


யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இன்று (26) மாலை அரங்கேறிய வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பண்ணை வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞரை, இரண்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.


தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் நிலைகுலைந்து பண்ணை கடற்பகுதிக்குள் விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், கடலில் விழுந்த இளைஞனை மீட்டு அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.



விசாரணைகள் தீவிரம்

தாக்குதலை நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், யாழ்ப்பாண பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தனிப்பட்ட பகை அல்லது குழு மோதல் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.