மட்டக்களப்பில் பெண்கள் கடத்த மயக்க மருந்துகள் பறிமுதல்!!
மட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு மயக்கமடையச் செய்து அவர்களின் நகைகளைப் பறித்த பின் கிணற்றுக்குள் துாக்கிப் போட்ட கும்பல் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதன் பின்னணியில் அவர்களை விசாரணைக்கு உட்படுத்திய போது அவர்களின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டை முற்றுகையிட்ட போது,
நிலத்தில் இரண்டு அடி ஆழத்தில் பாதுகாப்பாக பொலித்தீன் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த,
வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சையின் போது பாவிக்கப்படும் 6 மயக்க மருந்துகளை கொண்ட போத்தல் மற்றும் மயக்க மாத்திரைகள், மருந்துகள் மீட்டனர்.
அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்டு, 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை கைது செய்ததுடன் அவரது வீட்டின் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கொள்ளையர்கள் வழங்கிய மயக்கத்துக்கு பாவிக்கும்,
ஸ்பிரேயர் போத்தல் ஒன்றையும், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஒன்றையும் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்தக் கொடூரச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருப்பதுடன் இக்கொலைகளின் பின்னணியில் உள்ள முழுமையான வலையமைப்பை கண்டறியும் நோக்கில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தி வருவதுடன்,
குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை (27) மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




.jpeg
)





கருத்துகள் இல்லை