காவலரண்..!
விடுதலை எனும்
யாத்திரையில்
துப்பாக்கி ஏந்திய நெஞ்சம்
மரத்துக் கிடக்கின்றது
போர்க்காலத்தில் வரைந்த
கவிதை ஒன்று
இன்றும்
நெஞ்சை பிழிந்தெடுக்கிறது
களம் கண்ட
வேங்கையாய்
காவலரணில் காத்திருக்கிறேன்
கொத்தாய் வந்த
குண்டும்
சீறி வரும் சன்னமும்
எங்களைத் தாக்குகின்றன
மழையில் நனைந்து
ஈர ஆடையுடன்
காவலரணில்
கால்கள் கடுக்க நிற்கின்றேன்
பீரங்கிச் சத்தங்களோ
எம் காதுகளை
செவிடாக்கி விட்டன
தோழியரின் கனவுகள்
மனதினில்
அலையாய் மோதுகிறது
என்
துப்பாக்கியில் இருந்து
சன்னங்கள்
சீறும்போதெல்லாம்
இந்தப் போர்
ஒரு நாள் நிறைவுபெறும்
நம் கனவுகள்
நனவாகுமென நம்புகிறேன்
இந்த
சுவாலையை
யார் வந்தும் அணைத்திடார்
ஏனெனில்
காற்றோடு மூளாத
விடுதலைத் தீயே இது
#பிரபா அன்பு

.jpeg
)





கருத்துகள் இல்லை