யாழில் வைத்தியசாலையில் மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை!


 யாழில் வைத்தியசாலையில் மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்தது!


இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமையும் வைத்தியர் கடமையில் இல்லாமையும் தொடர்பான செய்தியை அடுத்து இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் விளக்கம் கோரியுள்ளது.


இவ்விளக்கத்தை 30.03.2026 இற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.


நேற்றையதினம் இளவாலை ஹென்றிஸ் பாடசாலை மாணவன் ஒருவர் பாடசாலை முடிந்து வீடு செல்லும்போது வீதியில் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை மேற்குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையிலேயே அங்கு சிகிச்சை வழங்காத நிலை காணப்பட்டது.


பின்னர் குறித்த மாணவனை, பாடசாலையின் முச்சக்கர வண்டியை வைத்தியசாலைக்கு வரவழைத்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.