யாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு!
இன்று காலை சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் ஒன்று கொடிகாமம் பகுதியில் வீதி கடமையில் இருந்த பொலிஸார் மீது மோதியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட நிலையிலும் அந்த உழவு இயந்திரத்துடன் சாரதி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தப்பிச் சென்ற உழவு இயந்திரம் கிளாலி பகுதியில் உள்ள ஒரு புதருக்குள் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த உழவு இயந்திரத்தின் ஒரு சக்கரத்தில் துப்பாக்கி சூடு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் சாரதி இதுவரை கைது செய்யப்படாத நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை