விடுதலை வேண்டி நின்ற இனம்!
கொடிகாமத்திலும்
கொடியவரா?
நேற்று ஒருத்தி
பெற்ற தாயைக் கொன்று
விற்ற நகையில்-புதிய
வீட்டிற்கு குடிபுகுந்தாள்
இன்று ஒருவன்
காவல்த் துறையிடம்-தனது
மணல்க் கொள்ளையை
மறைக்க கொலை செய்தான்
பாலஸ்தீனிய மக்களிடம்
இருந்த மனிதாபிமானம்-கூட
தமிழர்களிடம் இன்மையால்
உலகம் எம்மை ஏற்கவில்லை
நாம்தான் விடுதலை
வேண்டி நின்ற இனமா?
வே.கேசவன்

.jpeg
)





கருத்துகள் இல்லை