ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட இறுதிவரை போராடுவோம்!


வடமாகாண கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கெதிராக வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட இறுதிவரை போராடுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். 


இன்று (07.03.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


சேவையின் தேவை இடமாற்றம் என்ற பெயரில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பின்றி வடமாகாண கல்வி திணைக்களத்தால், முன்னெடுக்கப்படும் சட்டவிரோத இடமாற்ற செயற்பாடுகளுக்கு துணைபோகும் வகையில் வடமாகாண ஆளுநர் செயற்படுகிறார். 


இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண ஆணைக்குழுவுக்கும் சட்ட ஏற்பாடுகள் குறித்து முறையிட்டிருந்தும், சட்ட முரண் குறித்த விடயங்களுக்கு பதிலளிக்காமல் மழுப்பலான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது என்பது வடமாகாண ஆணைக்குழுவும் சுயாதீனமாக இயங்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. 


அநீதியான செயற்பாடுகளுக்கெதிராக வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட இறுதிவரை போராடுவோம் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.