ஈரான் போர் இறுதிக்கட்டத்தை அடைகிறது.!


இதுவரையான அமெரிக்க இஸ்ரேல் கூட்டுத்தாக்குதலில் ஈரானின் ஒட்டுமொத்த விமான நிலையங்களும் துறைமுகங்களும் முடக்கப்பட்டுள்ளது. ஈரானில் எந்தவொரு போர்க்கப்பலோ போர்விமானங்களோ கைவசம் இல்லை அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது. 


இஸ்ரேலிய போர் விமானங்கள் தற்போது ஈரானிய வான்பரப்பில் சுதந்திரமாக பறந்துவருகின்றன. இதுவரை இராணுவ இலக்குகளை மாத்திரம் குறிவைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் தற்போது ஈரானின் பொருளாதார இலக்குகளை நோக்கியும் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. 


இராணுவ நிலைகள் மீதான தாக்குதலில் இருந்து பொருளாதார இலக்குகளை நோக்கிய தாக்குதல் ஈரானை நிபந்தனையின்றி சரணடையும் நிலைக்கு கொண்டுவந்துகொண்டிருக்கிறது. ஈரானின் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் ஷேக்குகள் நாட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான நாடுகளில் அடைக்கலமாகியுள்ளனர். ஈரானின் பொருளாதார மையங்கள் தாக்குதலுக்கு உள்ளாக தொடங்கியிருப்பதால் நேரடியான பொருளாதார பாதிப்பில் இவர்கள் உள்ளனர். அவசர அவசரமாக மூன்றாம் தரப்பொன்றின் ஊடாக ஓர் இடைக்கால சமாதான உடன்படிக்கை ஒன்றினை செய்ய ஈரானின் அரச தரப்பை இவர்கள் தற்போது நெருக்க தொடங்கியுள்ளனர். 


நெருக்கடி மிகுந்த இந்த சூழலில் சமாதான மத்தியஸ்த்தில் ஈடுபட  நம்பிக்கைக்குறிய பலமிக்க மூன்றாம் தரப்பாக இந்தியாவை  🇮🇳  ஈரானிய உயர்மட்டங்கள் தலையீடு செய்ய கோருகின்றன. தற்போதைய நிலையில் இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி ஆகிய இருவருடனும் நெருங்கிய நட்பில் இருப்பவர் இந்திய பிரதமர் மோடி மாத்திரமே. அத்துடன் ஈரானிய மீள்கட்டமைப்புக்கு இந்தியாவின் பங்களிப்பே முதன்மையாகவும் இருக்கப்போகிறது. 


ஈரானின் முக்கியமான அனைத்து துறைமுகங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளபோதும் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் சபாஹர் (Chabahar) துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. சபாஹர் நகரின் இராணுவ மையங்களை குறிவைத்து தாக்கி அழித்த கூட்டுப்படைகள் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் துறைமுகத்திற்கு எவ்வித சேதங்களையும் ஏற்படுத்தவில்லை. அதேவேளை சீனாவால் நிர்வகிக்கப்படும் பண்டார் அபாஸ் (Bandar Abbas) துறைமுகம் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. 


ஈரானை நிபந்தனையற்று சரணடைய வைக்கவும் எதிர்காலத்தில் ஈரானை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் ஈரானின் பொருளாதார கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவது அவசியம் என அமெரிக்க இஸ்ரேல் கூட்டணி நினைக்கிறது. ஈரான் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு தாராளமாக தீனிபோடுவதும் உலகம் முழுவதும் அதை பரவலடைய வைப்பதற்கும் காரணம் அதன் பொருளாதார கையிருப்பே காரணம்.


அடுத்த வாரம் ஹேர்மூஷ் நீரிணை உத்தியோகபூர்வமாக இஸ்ரேல் அமெரிக்க கூட்டணியால் திறக்கப்படும். குறித்த நீரிணையை சர்வதேச கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க விசேட பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை அமெரிக்கா உருவாக்கிவருகிறது. அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் ஈரானை ஓர் இரு நாளில் அடைந்துவிடும் அத்துடன் ஈரான் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் அதன் பின் எஞ்சியிருப்பது ஓர் இடைக்கால அரசை நியமிப்பது மாத்திரமே. 


ஈரானின் அடுத்த இடைக்கால அரசு தொடர்பான பேச்சுக்கள் ஈரானிய முக்கியஸ்தர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈரானிய மத ஆட்சியாளர்களா பதவி விலக்கப்பட்ட ஷா மன்னரின் புதல்வரான ஈரானின் முன்னாள் இளவரசர் (Crown Prince) ரேசா பஹ்லவி (Reza Pahlavi). தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் தலைமையிலான மதச்சார்பற்ற இடைக்கால ஆட்சியொன்றை ஸ்தாபிக்க வாய்ப்புகள் உள்ளன. 


ஈரான் இப்போது பல் பிடுங்கப்பட்ட பாம்பு சீறினாலும் படமெடுத்தாலும்  மகுடிக்க ஆடியாகவேண்டிய கட்டயாத்தில் உள்ளது. அடுத்த வாரம் மத்திய கிழக்கில் அமைதி வாரம்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.