தோத்திரம்!!
….
இரண்டு சப்பாத்துகளை
அவள் விட்டுச் சென்றாள்
ஒரு புத்தகப் பையையும் தான்
உலகின்
ஒட்டுமொத்த
மனச்சாட்சியின்
முன்
உதிரம் தோய்ந்த அவை
தோல்வியடைந்ததை
அறியாமலே
அவள்
விட்டுச் சென்றிருந்தாள்
அவற்றில் உலர்ந்திருந்தது
அவளின் இரத்தம்
ஏன் கொல்லப்படுகிறோம்
என்றறியாத
அவளைப் போன்ற
எல்லாக் குழந்தைகளினதும்
இரத்தம்
இறைவழிபாடுகளின் போது
வெள்ளிப் பாத்திரங்களில்
நிரம்பியிருந்தது
படைக்கும்
ஒவ்வொரு பொருட்களிலும்
அதுவே பூசியிருந்தது
நோன்பைத் திறந்து
அருந்தும்
தேநீரில் கரைந்திருந்தது
குழந்தைகள் வணங்கிய
கடவுள்-
முன்னொரு நாளில்
இஸ்ரவேலின் ஊடாக
அமெரிக்கா சென்றதை
அவர்கள் அறிந்திலர்
ஆண்டவரே!
அடுத்த பிறப்பிலாவது
அவர்களை உம்முடன்
பிறக்கச் செய்யும்!
மாயன்


.jpeg
)





கருத்துகள் இல்லை