துரோகம் என்பது சில நாடுகளுக்கு அதுவே ராஜதந்திரம்!
நட்பு என்பது ஒரு நாட்டின் பலம், ஆனால் துரோகம் என்பது சில நாடுகளுக்கு அதுவே ராஜதந்திரம்.
"துரோகம் செய்வது இந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல" என்ற கசப்பான உண்மையை வரலாறு அவ்வப்போது உரக்கச் சொல்லி வருகிறது.
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அதே நயவஞ்சகம், இன்று ஈரான் விவகாரத்திலும் அரங்கேறியுள்ளது.
தமிழர் வரலாற்றில் இந்தியா இழைத்த துரோகங்கள் என்றுமே தமிழர் மனதில் இருந்து ஆறாத காயங்கள்.
குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை நயவஞ்சகமாகப் பிடித்துக் கொடுத்தது முதல், கேணல் கிட்டுவை சர்வதேச கடற்பரப்பில் காட்டிக்கொடுத்தது வரை இந்தியாவின் கைகள் இரத்தக் கறை படிந்தவை.
வன்னி இறுதிப் போரில், தமிழர்களின் நிலைகளைச் செய்மதி (Satellite) புகைப்படங்கள் மூலம் சிங்களப் படைக்குத் தாரை வார்த்து, இலட்சக்கணக்கான தமிழர்களின் மரணத்திற்குத் துணை நின்றதை எந்தவொரு தமிழனும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டான்.
இந்தத் துரோகத்தின் உச்சகட்டமாக, பிப்ரவரி 25 வரை இந்தியக் கடற்படை வங்காள விரிகுடாவில் நடத்திய 'மிலன்' (MILAN) கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய ஈரானியப் போர்க்கப்பல் IRIS Dena மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் தோளோடு தோள் நின்று பயிற்சியை முடித்துவிட்டு, நட்புணர்வுடன் நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய வீரர்களை, அவர்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காட்டித் கொடுத்து அமெரிக்காவின் வேட்டைக்கு இரையாக்கியுள்ளது இந்தியா.
அமெரிக்கப் போர் அமைச்சகம் வெளியிட்ட நீர்மூழ்கிக் கப்பலின் பெரிஸ்கோப் (Periscope) காட்சிகளில், ஒரு Mk 48 டார்பிடோ ஏவுகணை IRIS Dena கப்பலின் பின்பகுதியைத் தாக்கி, அந்தக் கப்பலையே நீரிலிருந்து மேலே தூக்கி எறிவதைக் காண முடிகிறது.
இலங்கையின் காலி நகருக்கு தெற்கே 20 கடல் மைல் தொலைவில் இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
180 மாலுமிகளைக் கொண்ட அந்தக் கப்பலில், இதுவரை 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
32 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் கடலில் மூழ்கிவிட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் உடலில் கடுமையான எரிகாயங்களும், வெட்டுக்காயங்களும் காணப்படுகின்றன. இது வெறும் எதேச்சையான தாக்குதல் அல்ல; மிகத் துல்லியமான தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்ட வேட்டை.
தன்னுடன் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களுக்கே பாதுகாப்பு அளிக்கத் துப்பில்லாத இந்தியா, அந்த உளவுத் தகவல்களைத் தனது 'மேற்கத்திய எஜமானர்களிடம்' விற்றுள்ளது.
தங்கள் தாய்நாட்டிலிருந்து 4000 மைல்கள் தாண்டி வந்த இந்த வீரர்கள், இந்தியாவால் அமெரிக்காவிற்குக் காட்டிக்கொடுக்கப்பட்டதால் இன்று கடலில் சடலங்களாக மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை கடற்படை இது குறித்து மௌனம் காப்பதும், முறையான அறிக்கை சமர்ப்பிக்காமல் இருப்பதும் இதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய சதியை உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த 'நிழல் கூட்டணி' அறியாமல் இந்தியாவுடன் நட்பு வைத்திருக்கும் ஈரானை நினைத்து பரிதாப்பட மட்டுமே முடிகிறது.
"பயிற்சியளித்த குருவே சீடனைக் காட்டிக்கொடுக்கும் இந்த இந்தியத் துரோகம், வரலாற்றில் ஒருபோதும் மன்னிக்க முடியாத கறையாகவே இருக்கப் போகின்றது”
ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அதே துரோக முறை (Pattern), இன்று ஈரானுக்கும் திரும்பியுள்ளது. அன்று ஈழத் தமிழர்கள்; இன்று ஈரானியர்கள். இந்தியாவின் இந்த நயவஞ்சக அரசியலும், வல்லரசு நாடுகளுக்குத் தகவல் வழங்கும் 'தரகர்' வேலையும் சர்வதேச அரங்கில் அதன் நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றி உள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை