சுவிஸில் ஈழத்தமிழரின் சாதனை!!

 


புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) துணைத்தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiram Chandrelegar) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஜெனிவா மாநிலத்தில் பிறந்த ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம், தனது கடின உழைப்பாலும் திறமையாலும் சுவிஸ் இராணுவத்தின் உயரிய பொறுப்புகளில் ஒன்றை எட்டியுள்ளார்

2025-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய நிர்வாகக் குழுவில், லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் தலைவராகவும், லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

சுவிற்சர்லாந்து இராணுவத்தின் மிக முக்கியமான அமைப்பான சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய துணைத்தலைவராக, ஈழத்தமிழ் பின்புலத்தைக் கொண்ட லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiraam Chandrelegar) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலைல் ஈழத்தை பின்புலமாக கொண்ட இளைஞனின் இந்த சாதனை புலம பெயர் மக்களுக்கு மட்டுமல்லாது இலங்கை வாழ் தமிழர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.