பிரித்தானியாவில் தமிழினை GCSE தகுதிக்கு உள்வாங்குவதற்கான பரப்புரை முன்னெடுப்பு!


பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் { Gareth Thomas MP,   Uma Kumaran MP } சேர்ந்து, தமிழினை GCSE  தகுதிக்கு உள்வாங்குவதற்கான பரப்புரையினை முன்னெடுத்துள்ளனர். தற்போதுள்ள நடைமுறையின் படி குறித்த தேர்வுக்கு தமிழினை ஒரு பாடமாக நேரடியாக எடுக்க முடியாது.  IGCSE  கேம்பிரிட்ச் இன்ரர்நசனல் என்ற வகையினுள் தமிழ் இருக்கின்ற போதும், அதனைத் தேசிய மட்டத்தில் ஏற்றுக் கொள்வதில் ஒரு குழப்பமான நிலையுள்ளது. GCSE தகுதிக்குள் தமிழ் கொண்டு வரப்படுமானால், தேசிய மட்டத்தில் அத் தகுதி ஏற்றுக்கொள்ளப்படும். அதற்காகவே இந்தப் பரப்புரை.  பிரித்தானியாவில் வாழ்வோர் கீழுள்ள இணைப்புக்குச் சென்று இந்த முன்னெடுப்புக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இணைப்பு 👉 👇

Two British Members of Parliament have launched a campaign calling for the introduction of a GCSE qualification in Tamil, stating that the move would recognise the language’s global significance and provide fair educational opportunities for Tamil-speaking students across the United Kingdom. 

The students in the UK currently cannot sit a GCSE in Tamil. While the Cambridge International IGCSE in Tamil is available, it is not a nationally recognised GCSE qualification and is not widely offered in state schools. This lack of formal provision restricts opportunities for Tamil‑speaking students who wish to maintain and develop their language, culture, and identity through mainstream education.

Let’s ensure that Tamil‑speaking students in UK  have access to the educational recognition they deserve.

Please go to the following link and give your support for including Tamil in GCSE. Click the link below 👇

https://gareththomas.org.uk/petition-calling-for-a-gcse-in-tamil/

"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
: திருக்குறள் 102
{காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்}

"Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu"
: Thirukural 102

A timely help, though small, Is of greater value than all the earth.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.