லன்டன் சௌத்தென்ட் அருள்மிகு கோணேச்சுரர் திருக்கோவில் 1ம் ஆண்டு நிறைவு சங்குத் திருமஞ்சனப் பெருவிழா!
பிரித்தானிய நாட்டில் சௌத்தென்ட்மா நகரில் அமைந்துள்ள அருள்மிகு கோணேச்சுரர் திருக்கோவில் 1ம் ஆண்டு நிறைவு சங்குத் திருமஞ்சனப் பெருவிழா.(30.04.2026 வியாழக்கிழமை) இடம்பெற உள்ளன.
தகைசால் சீர் அடியார்களே!
திருவள்ளுவர் ஆண்டு 2057 (அருட்டோற்றம் / பராபவ வருடம்). மேழத் திங்கள் (சித்திரை) 17ம் நாள் வியாழக்கிழமை ஆடை (சித்திரைச் சித்திரை) விண்மீன்சேர் பதிநான்மை (சதுர்த்தசி) பிறை (திதி) நன்நாளில் மாலை 14:00 மணிமுதல் இத்திருக்கோவிலில் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்ஞானமிகு உலகம்மை உடனாய கோணேச்சரப் பெருமானுக்கும்.
இத் திருக் கோவிலில் எழுந்தருளி அருளாட்சி செய்துகொண்டிருக்கும் சுற்றுத்தெய்வங்களுக்கும் சிறப்புத் திருமஞ்சனம் ஆற்றப்பட்டு, மாலை 16:00 மணிக்கு யாகசாலை பூசைகள் ஆரம்பிக்கப்பட்டு, இரவு 20:00 மணியளவில் அருளமுதுடன் (அன்னதானம்) பூசைகள் இனிதே நிறைவேறும் என்பதனை திருவருள் துணைகொண்டு அறியத்தருகின்றோம்.
தொண்டர்களும், மெய்யடியார்களும், பொதுமக்களும் நடைபெறவுள்ள சங்குத் திருமஞ்சனப் பெருவிழாவில் கலந்து உலகம்மை உடனுறை கோணேச்சுரரின் திருவருளைப் பெற்றுய்ய வேண்டுகின்றோம்.
சங்குத் திருமஞ்சனப் பெருவிழா நல்கையாளர்கள்
திரு.திருமதி. கந்தரத்தினம் இணையர் குடும்பம்
திரு.திருமதி. பிரதிபன் இணையர் குடும்பம்
திரு.திருமதி. அரன்ராஜ் இணையர் குடும்பம்
திரு.திருமதி. அனந்தன் இணையர் குடும்பம்
திரு.திருமதி. பிரபு இணையர் குடும்பம்
திரு.திருமதி. துஸ்யந்தன் இணையர் குடும்பம்
திரு.திருமதி. தயாபரன் இணையர் குடும்பம்
இத்திருக்கோவில் இறை வழிபாட்டுக்குரிய நேரம்
காலை 9:00 மணிமுதல் நண்பகல் I:00 மணிவரை | மாலை 4:30 மணிமுதல் இரவு 8:30 மணிவரை
இங்ஙனம்
நிர்வாக சபை.
சௌத்தென்ட் அருள்மிகு கோணேச்சுரர் திருக்கோவில்.
சைவநெறிக்கூடம் சௌத்தென்ட்
SOUTHEND SIVAN KOVIL

.jpeg
)





கருத்துகள் இல்லை