மருதானை ரயில் நிலைய நவீனமயமாக்கல் திட்டம் நிறைவு!📸
மருதானை ரயில் நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
“Clean Sri Lanka” தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் மருதானை ரயில் நிலையம் முதல்கட்ட வேலைகள் முடிவடைந்து திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேலைகள் சுமார் 7 மாதங்களுக்கு முன்பு மருதானை ரயில் நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இது Clean Sri Lanka தேசிய திட்டம், இலங்கை ரயில்வே திணைக்களம், NIO Engineering அமைப்பு, தனியார் துறை மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டத்திற்கான மொத்த செலவாக ரூபாய் 35 மில்லியன், Aksa Brothers Private Limited நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 6 மாத காலத்தில், தொல்லியல் துறை மேற்பார்வையில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளின் கீழ்:
- பாதுகாப்பு கமரா அமைப்பு
- மின்விளக்கு அமைப்பு
- நவீன சுகாதார வசதிகள்
- கட்டிடத்தின் வெளிப்புறம் மற்றும் உள்புறம் வர்ண வேலை
- சுற்றுப்புற அழகாக்கம்
பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த நூற்றாண்டுக்கு மேற்பட்ட பழைய ரயில் கட்டிடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இருந்த நீர் கசிவு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 சதுர அடி மேல் மாடியில் கொங்ன்கிரீட் கூரை பகுதி, நீர் கசிவு இல்லாத (Water Proof) நவீன தொழில்நுட்பத்துடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இங்கு முடிவடையவில்லை. எதிர்காலத்தில் மருதானை ரயில் நிலையம் பல கட்டங்களாக மேலும் நவீனமயமாக்கப்பட உள்ளது. முதல் கட்டம் தற்போது வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.












.jpeg
)





கருத்துகள் இல்லை