சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதைத் தவிர்க்குக!

 


பண்டிகை காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி சுற்றுலாச் செல்பவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


விடுமுறையில் இருப்பது தொடர்பான பதிவுகள் மூலம் தங்களது வீடுகளில் ஆள் நடமாட்டமின்றி இருப்பதை திருடர்களுக்கு தெரியப்படுத்துவதாக அமையும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் வைத்திருப்போர் பண்டிகை காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தப் பதிவுகளைக் காண்பதன் மூலம் திருடர்கள் திட்டமிட்டு இருப்பிடங்களுக்குள் புகுந்து பணம், நகை மற்றும் பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடிக்கத் தூண்டுவதாக அமைகிறது.


எனவே, நீண்ட நாட்களுக்கு வீட்டை விட்டு செல்லும் சந்தர்ப்பங்களில் அருகிலுள்ள காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கோ அல்லது சிவில் பாதுகாப்புக்குழு தலைவருக்கோ முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


வீடுகளில் உள்ள சி.சி.டி.வி பாதுகாப்பு கமராக்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்புக்களை சரியாகச் செயற்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


#SrilankaTamilnews #SrilankaNewstoday #SriLankaNewstamil #NewLanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.