ஈஸ்டர் முட்டை திருடனைப் பிடித்த ஊழியருக்கு விடுகை!
17 வருட சேவையை மறந்த வெயிட்ரோஸ் (Waitrose) நிறுவனம்!
திருடனைப் பிடிப்பது குற்றமா? லண்டன் சுப்பர் மார்க்கெட் ஊழியர் நீக்கம்! வெடிக்கும் சமூக ஊடக விவாதங்கள்! 🛒⚖️
லண்டனில் உள்ள பிரபல 'வெயிட்ரோஸ்' (Waitrose) சுப்பர் மார்க்கெட்டில் 17 வருடங்களாகப் பணியாற்றிய ஊழியர் ஒருவர், கடையைத் திருட வந்தவனைத் தடுத்த காரணத்திற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தற்போது பிரித்தானிய அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 🚨
⁉️அன்று நடந்தது என்ன?🍫
54 வயதான வோக்கர் ஸ்மித் (Walker Smith), லண்டன் க்ளப்ஹாம் ஜங்ஷன் பகுதியிலுள்ள கிளையில் விற்பனை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று, வாடிக்கையாளர் ஒருவர் 'லிண்ட்' (Lindt) வகை ஈஸ்டர் முட்டைகளை ஒரு நபர் திருடிப் பையில் நிரப்புவதாகக் கூறியுள்ளார்.
வழக்கமாக இவ்வாறான நேரங்களில் மேலதிகாரிகளுக்குத் தகவல் வழங்குவதே நடைமுறை. ஆனால், நாளாந்தம் நடக்கும் திருட்டுகளைக் கண்டு விரக்தியடைந்த ஸ்மித், திருடனைத் தடுத்து அவனது பையைப் பிடித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு தள்ளுமுள்ளில் பை கிழிந்து ஈஸ்டர் முட்டைகள் சிதறி விழுந்தன. திருடன் தப்பியோடிய நிலையில், விரக்தியடைந்த ஸ்மித் தரையில் கிடந்த உடைந்த முட்டைத் துண்டு ஒன்றை எடுத்து தூக்கி வீசியுள்ளார்.
💔"உள்ளுக்குள் அழுதேன்" - ஊழியரின் மனவேதனை 💔
இந்தச் சம்பவத்தையடுத்து விசாரணை நடத்திய நிர்வாகம், ஸ்மித் நிறுவனத்தின் விதிகளுக்கு முரணாக நடந்துகொண்டதாகக் கூறி அவரை வேலையிலிருந்து நீக்கியது.
இது குறித்து ஸ்மித் கூறுகையில், "வெயிட்ரோஸ் எனது குடும்பம் போன்றது. 17 வருடங்களாக அங்கே உழைத்தேன். என்னை அவர்கள் குப்பைத் தொட்டிகள் இருக்கும் பின்வாசல் வழியாக வெளியே அழைத்துச் சென்றபோது மிகவும் அவமானமாக இருந்தது. நான் வன்முறையாளன் கிடையாது, ஆனால் தொடர்ந்து நடக்கும் திருட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் ஏற்பட்ட விரக்தியே அது," எனத் தெரிவித்துள்ளார்.
📣நிறுவனத்தின் விளக்கம் என்ன? 🛡️
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், வெயிட்ரோஸ் நிறுவனம் தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.
🔺 "எமது ஊழியர்களின் உயிர் பாதுகாப்பு எமக்கு மிக முக்கியம். திருடர்களைத் தடுக்க முற்பட்ட போது எமது ஊழியர்கள் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளன."
🔺"எந்தவொரு பொருளும் ஒரு மனித உயிரை விடப் பெறுமதியானது அல்ல. பாதுகாப்பு விதிகள் தெளிவாக உள்ளன, அவை மீறப்பட்டதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது," என நிறுவனம் தெரிவித்துள்ளது. ⚖️
உதவ முன்வரும் பொதுமக்கள்! 🤝
வேலையிழந்த ஸ்மித் தனது பேஸ்புக் பக்கத்தில், தனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தற்போது அவர் வேறு வேலை தேடி வருவதாகவும், 17 வருட அனுபவமுள்ள தனக்கு யாராவது வேலை வாய்ப்பு இருந்தால் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருடனைப் பிடிக்க முயன்ற ஊழியரின் நேர்மையைப் பாராட்டுவதா அல்லது பாதுகாப்பு விதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என இணையவாசிகளிடையே கடும் விவாதம் எழுந்துள்ளது! 💻
உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள எமது பக்கத்துடன் இணைந்திருங்கள்!🔔
#Waitrose #LondonNews #JusticeForWalkerSmith #RetailCrime #UKUpdates #TamilNews #LankaGrammar

.jpeg
)





கருத்துகள் இல்லை