பிரித்தானியாவில் Adder வகை சாரை பாம்புகள்!📸

 


பிரித்தானியாவில் இப்போது வசந்த காலம் (Spring season) தொடங்கி விட்டது. சூரிய ஒளி அதிக நேரமும் உடலுக்கு இதமான வெப்பநிலையும் அதிக மக்களை பூங்காக்கள் மற்றும் வனங்களை நோக்கி பொழுது போக்கு மற்றும் விடுமுறை உல்லாச நிகழ்வுகளுக்கு வரவழைக்கும்.

 இத்தகைய நிகழ்வுகளுக்கு செல்லும் எம்மவர்கள் சில இடங்களில் பாம்புகள் பற்றி எச்சரிக்கை ஆக இருக்கவேண்டும்.


பிரித்தானியாவில் Adder வகை சாரை பாம்புகள் பொதுவானவை. இவற்றில் விஷம் பலமாக இல்லை என்றாலும் இவற்றின் கடியானது குழந்தைகள், மிருகங்கள், உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உடல் உபாதைகளை விளைவிக்கும் என வைத்தியர்கள் எச்சரித்து உள்ளனர். இவை கடித்தால் உடனே வைத்திய சேவையை நாடவும்.

பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் சற்று கவனம் ஆக இருங்கள்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.