மின்னல் தாக்கியதில் அந்த இளம் பெண் மரணம்!

 


மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (08)மாலை இடம்பெற்று, அந்தப் பகுதி முழுவதும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


அவரது பெற்றோர் வீட்டிற்கு அருகிலுள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த வேளையில், திடீரென கடும் மழை பெய்தது. பெற்றோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு குடை எடுத்துச் செல்ல முயன்றபோதே இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.


மின்னல் தாக்கியதில் அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.