சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நடுகை!📸


சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 3 மாடிகளையும், 30 வகுப்பறைகளையும் கொண்ட புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடுகை நிகழ்வு இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து புதிய கட்டடத்தின் அடிக்கல்லை நடுகை செய்தார்.


கௌரவ ஆளுநர் உரையாற்றி கூறியது:

"ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு மனித வளம் எத்துணை முக்கியமோ, அதே அளவுக்கு பௌதீக வளமும் அவசியம். பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து செய்த இந்த பங்களிப்பு மிகவும் போற்றுதலுக்குரியது."


மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த புதிய கட்டட பணிகள் விரைவில் நிறைவேற்று, திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வில் கல்வி நிர்வாகிகள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.


பழைய மாணவர்களின் ஆதரவும் சமூக பங்களிப்பும் பாடசாலையின் வளர்ச்சிக்கு முக்கிய தூணாக அமையும் என்பதை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.