“புறக்கோட்டை” கல்வெட்டில் பிழை – மன்னிப்பு கோரி திருத்த நடவடிக்கை!


 “புறக்கோட்டை” கல்வெட்டில் பிழை – மன்னிப்பு கோரி திருத்த நடவடிக்கை: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் கலாநிதி கபிலன் சுந்தரமூர்த்தி 


கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட கல்வெட்டில் “புறக்கோட்டை” என்ற தமிழ்ச்சொல் தவறாக “புநக்கோட்டை” என அச்சிடப்பட்டிருந்தமை தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் மற்றும் முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி கபிலன் சுந்தரமூர்த்தி அவர்கள் மனவருத்தம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த பிழை தவறுதலாக 

இடம்பெற்றதேயன்றிஅதனை முன்கூட்டியே சரிபார்க்க தவறியமைக்காக தமிழ்ச் சமூகத்தினரிடமும், தமிழ் மொழிப் பற்றாளர்களிடமும் மன்னிப்புக் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், இவ்வாறான பிழைகள் ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், தவறுகளை சுட்டிக்காட்டும் மக்களின் விழிப்புணர்வு இத்தகைய திருத்தங்களுக்கு வழிவகுப்பதாகவும் குறிப்பிட்டார்.


அத்துடன், குறித்த பிழை திருத்தப்பட்டு புதிய பெயர்க்கல்வெட்டு மீண்டும் நிறுவப்படும் என Clean Sri Lanka செயலகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.


இவ்விடயத்தில் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட தளங்களில் கருத்துகளை பகிர்ந்து பிழையை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் திருத்தப்படுவதற்கான வாய்ப்பாக இவ்வனுபவத்தை எடுத்துக்கொள்வோம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.