தாய், மகள் சடலமாக மீட்பு!!
பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் தமிழர்களான தாயும் மகளும் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தவகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்வத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயதுடைய தாய் மற்றும் அவரது 20 வயதுடைய மகள் ஆகிய இருவருமே உடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வீட்டிலிருந்து நீண்ட நாட்களாக யாரும் வெளியே வராத காரணத்தினால் அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையின் போது, இது உயிர் மாய்ப்பாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

.jpeg
)





கருத்துகள் இல்லை