நடத்துனருக்கு பணித்தடை!!

 கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதியுடன்


பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநர் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த நடத்துநர் இ.போ.ச. சாரதியுடன் முரண்படும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது. துரிதமாகச் செயற்பட்ட வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, காணொலியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்தது.

விசாரணையில் நடத்துநரின் ஒழுங்கீனமான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சர்ச்சைக்குரிய நடத்துநருக்குக் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரிடையே ஏற்படும் இவ்வாறான ஒழுக்க மீறல்கள், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள், மேலதிக கட்டணம் அறவிடப்படுதல் அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டால்,

எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.