பற்றி எரிந்த சுவிஸ் விமானம்!!
டில்லி விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கிச் சென்ற சுவிஸ் ஏர் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவசரமாக தரையிறக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் 6 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இன்ஜின் பழுதானதை விமானி உணர்ந்தார். விமானத்தின் இடதுபுறத்தில் புகை வெளியேறுவதையும் கண்டு, உடனடியாக ஓடுபாதையிலேயே விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
.பயணிகள், ஊழியர்கள் அனைவரும் அவசரகால சறுக்கு பாதை வழியாக வெளியேற்றப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். விமானிகள் சாமர்தாதியமாகச் செயற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலைய ஓடுதளம் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்நடுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை