விரைவில் விண்கல் மழை!!
எதிர்வரும் மே மாதம் 6-ஆம் திகதி ' ஏட்டா அக்குவாரிட்ஸ்' விண்கல் மழை, அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற 'ஹேலி வால்நட்சத்திரம்' விண்வெளியில் விட்டுச் சென்ற துகள்கள் வழியாக பூமி கடந்து செல்லும் போது இந்த விண்கல் மழை ஏற்படுகிறது.
இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, உராய்வினால் எரிந்து வானில் பிரகாசமான ஒளிக்கோடுகளாகத் தோன்றும்.
இந்த விண்கல் மழை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 27 ஆம் திகதி வரை நீடித்தாலும், மே 6-ஆம் திகதி அதிகாலை வேளையிலேயே அதிகப்படியான விண்கற்களைக் காண முடியும்.
மே 6-ஆம் திகதி அதிகாலை 2:00 மணிக்கு மேல், கிழக்குத் திசை வானத்தை நோக்கிப் பார்ப்பது சிறந்தது. வானம் தெளிவாகவும் வெளிச்சம் குறைவாகவும் இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 40 முதல் 85 விண்கற்கள் வரை தென்பட வாய்ப்புள்ளது
வெட்ட வெளியான வானத்தி.வெற்று கண்களாலேயே பார்க்கமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை