நீண்ட காலத்தின் பின் விடுவிக்கப்பட்ட ஆலயம்!!

 


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாச்சிமார் ஆலய வளாகத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த ஆலயப்பகுதியிலிருந்து, இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளுமின்றி திடீரென செவ்வாய்க்கிழமை (27) அன்று வெளியேறியுள்ளனர்.

25 ஆண்டுகால ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தாலும், ஆலய வளாகத்திலிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.