பழங்குடித் தலைவர் இறுதிச் சடங்கு!📸
மறைந்த ரத்துகல பழங்குடித் தலைவர் சுதாவன்னியலெத்த அவர்களின் இறுதிச் சடங்கு நேற்று (09) பிற்பகல் ரத்துகல பகுதியில் பாரம்பரிய மரபுகளுடன் நடைபெற்றது.
இந்த இறுதிச்சடங்கில் தம்பான பழங்குடித் தலைவர் ஊருவரிகே வன்னியலெத்தோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பழங்குடித் தலைவர்கள், சமூக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பழங்குடி மக்களின் பாரம்பரிய வழக்கங்களின்படி இறுதி கிரியைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மறைந்த சுதாவன்னியலெத்த அவர்களின் மகன் ரத்துகல பழங்குடி சமூகத்தின் புதிய தலைவராகப் பெயரிடப்படும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.
இந்த நிகழ்வு பழங்குடி மக்களின் மரபு, ஒற்றுமை மற்றும் தலைமுறை வழி தலைமைத்துவத்தின் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
📢 மறக்காமல் Tamilarul.Net பக்கத்தைப் பின்தொடரவும்.
🌐 இணையதளம்: www.Tamilarul.Net
📢 தொடர்பு கொள்க:
Facebook page: Like 👍|Share⚡️
Share: 👥
▶️YouTube: Subscribe 🔔
மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்:






.jpeg
)





கருத்துகள் இல்லை