அரசு கொறடாவாக விருகை தவெக எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!


தமிழக அரசின் கொறடாவாக தவெக எம்எல்ஏ சபரிநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார்.


தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பு நாளை(மே 13) நடக்கிறது. அதுகுறித்து ஆலோசிக்க, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் வந்தார்.


இந் நிலையில், தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தவெக எம்எல்ஏ சபரிநாதன் அறிவிக்கப்பட்டு உள்ளார். பிடெக் பட்டதாரியான இவர் விஜய்யின் கார் டிரைவர் ராஜேந்திரனின் மகன் ஆவார். சட்டசபை தேர்தலில், திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவை 27,086 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.