விடுதியில் நடந்த அதிர்ச்சி மரணம் பெண்ணுடன் தங்கியிருந்த நபருக்கு நேர்ந்த கதி!


மஹியங்கனை விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹசலக பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர், மஹியங்கனை நகரில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அவருடன் ஹங்குரான்கெத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும் இருந்துள்ளார்.  

 

நேற்று திடீரென குறித்த நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, உடனடியாக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


📌​விசாரணையில் தெரியவருகையில் 

 *உயிரிழந்த நபருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான பழக்கம் நீண்ட கால நட்பு இல்லை . சமீப காலத்திலேயே இருவரும் அறிமுகமாகியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

​இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதால், அவருடன் தங்கியிருந்த பெண்ணை மஹியங்கனை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.


மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன? இது திட்டமிட்ட சதி செயலா அல்லது இயற்கையான மரணமா? என்பது குறித்து மஹியங்கனை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


​​#BreakingNews #srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.