முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குப் போவோம்!
மகள்...👉 அம்மா
அம்மா👉 ஓம் பிள்ளை என்ன?
மகள் 👉 உங்களுக்கு 18ஆம் திகதி திங்கள் கிழமை கண் கிளினிக் இருக்குது நினைவிருக்கே?
அம்மா👉18ஆம் திகதியோ பிள்ளை.நான் போகமாட்டன் ஆசுப்பத்திரியுக்கு
மகள்👉ஏனம்மா.போனால்தானே கண்ணுக்கு எப்ப ஒப்பிறேசன் செய்யிறதென்று நாள் எடுக்கலாம்
அம்மா👉பிள்ளை என்ர இரண்டு குஞ்சுகளையும் நான் கடைசி யுத்தத்தில பறிகொடுத்திட்டன்.வருசத்தில ஒரு நாள் என்ர பிள்ளைகளை நினைவுகூரும் இடத்துக்கு போகாட்டி பிறகென்னத்துக்கு நான் அம்மா என்று இருப்பான்
மகள்👉 ஓம் அம்மா 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுதினம் எண்டுறதையே நான் மறந்துபோனன்
அம்மா👉 என்ர சின்னவன் குளிக்கப்போன இடத்தில றவுன்ஸ்பட்டு செத்துக்கிடந்த கோலத்தை எப்படி நான் மறப்பன்.என்ர உடம்பில உயிர் இருக்கும்வரை,என்ன நடந்தாலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு போகாமல் விடமாட்டன்
மகள்👉 அம்மா இந்த முறை நானும் வாறன்.யாழ்ப்பாணத்தில இருந்து போக நேரம் சரியாக வருமோ.நேரம் போகாதோ?
அம்மா👉 நான் ஒவ்வொரு வருசமும் போய்வாறனான்தானே.அது பிள்ளை யாழ்ப்பாண ரவுனில நின்றாலே "முள்ளிவாய்க்கால்" என்று எழுதின பனருகளோட நிறைய வஸ்சுகள் போகும்.சனம் தனி வஸ்சுகள் பிடிச்சுக்கொண்டெல்லாம் போகுங்கள்.கையக்காட்டி மறிச்சு ஏறிப்போகலாம்.யாரும் ஏத்தாமல் போகமாட்டினம்.
மகள்👉 உண்மையாகவே அம்மா.நான் நினைவேந்தலுக்கு போகாதபடியால் தெரியாமல் போச்சுது
அம்மா👉 யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அங்கால வஸ் தரிப்பிடங்களில நின்றால் தனி வஸ் பிடிச்சு வாறசனம் கேட்டுக்கூட ஏத்திக்கொண்டு போகுங்கள்.நாங்கள் மறிச்சும் ஏறிப்போகலாம்.எல்லா மாவட்டங்களில இருந்தும் முள்ளிவாய்க்காலுக்கு வஸ்சுகள் வாறது
மகள்👉எத்தனை மணிக்கு விளக்கு பொதுச்சுடர் ஏற்றுவினம்
அம்மா👉 அது பிள்ளை 10-30க்குத்தான் விளக்கேற்றுறது. நேரத்தோட 6-00-6-30 மணிக்கு வெளிக்கிட்டம் என்றால் போடுவம்.
மகள்👉அம்மா இந்த முறை கட்டாயம் நான் வாறதுதான்.18ஆம் திகதி கறுப்பு உடுப்புத்தானே போடுறது?
அம்மா👉ஓம் பிள்ளை நான் கறுப்பு சீலைதானே கட்டிக்கொண்டு போறனான். கூடுதலான சனங்கள் கறுப்பிலதான் உடுப்பு போட்டுவாறது.றோட்டோரங்களில கிடாரங்கள் வச்சு கஞ்சி காய்ச்சி போறவாற சனத்துக்கெல்லாம் மறிச்சு கஞ்சி கொடுப்பினம்.நீ வந்து பாரன் எவ்வளவு சனம் மட்டக்களப்பு,கொழும்பு,திருகோணமலை,மன்னார்,வவுனியா என்றிருந்தெல்லாம் வருங்கள் என்று.
மகள்👉ஆ...அப்படி நிறைய சனம் வருமே?
அம்மா👉வெளிநாட்டில இருந்தெல்லாம் எங்கட சனம் வாறது பிள்ளை,சிங்களவர்,வெள்ளைக்காறர்கூட வந்திருக்கினம்.நீ இந்த முறை வந்து பார்.பிறகு மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு போகாமல் நிற்கமாட்டாய்
மகள்👉 ஆ..சரி அம்மா.18ஆம் திகதி நிறைய பூவெல்லாம் ஆய்ந்துகொண்டு போவம் என?
அம்மா👉ஓம் பிள்ளை.போராடினதால எங்களுக்கு விடிவு கிடைச்சுதோ கிடைக்கேலயோ அதுவேறகதை.ஆனால் நாங்கள்பட்ட அவலங்களை அடுத்த தலைமுறைக்கு காட்டவேணும்.அது எங்கட கடமையும்.
#பிரபா அன்பு

.jpeg
)





கருத்துகள் இல்லை